அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
அமெரிக்கா ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாக உள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் துருக்கி ஜனாதிபதி தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி ஜனாதிபதியான ரிசிப் தயிப் எர்டோகன் நேற்று செவ்வாய்கிழமை நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது அமெரிக்காவின் மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். அதில் அவர், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் தீவிரவாதத்திற்கு ஆதரவாக உள்ளனர்.
அமெரிக்கா தீவிரவாத படைகளுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், அதில் ஐஎஸ் தீவிரவாதிகள், ஒய்பிஜி மற்றும் பிஒய்டி யும் அடங்கும் என கூறியுள்ளார்.அமெரிக்கா தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பதை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தெளிவுப்படுத்துகின்றன என கூறியுள்ளனர்.
மேலும் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் சிரிய ஜனாதிபதியான பஷிர் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்களை உருவாக்கி வருவதாகவும், இதை தாம் முறியடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ISIS க்கும் முஸ்லிம்களும் சம்மந்தம் இல்லை அவர்களை இயக்குவது அமெரிக்கா!
Reviewed by ADMIN
on
10:56 AM
Rating:
Reviewed by ADMIN
on
10:56 AM
Rating:



No comments: