ஞாயிற்றுக்கிழமை (25) ஹைபாவில் அமைந்துள்ள இஸ்Nலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் எரிபொருள் தாங்கியொன்றில் பாரிய தீ எற்பட்டதாகவும் இஸ்ரேலின் வடக்குத் துறைமுக நகருக்கு மேலாக கரும்புகை வான்வெளியில் பரவியதாகவும் ரொயிட்டர் செய்தித்தாபனம் தெரிவித்துள்ளது.
‘எமது எரிபொருள் தாங்கியொன்றில் தீ எற்பட்டுள்ளது, சாதாரணமாக அதில் இருந்த எரிபொருளின் அளவு குறைவானதாகும், சுமார் ஒரு மீற்றர் (மூன்று அடி) உயரத்திற்கே எரிபொருள் இருந்தது’ என ஹைபா தீயணைப்புப் படையின் பேச்சாளர் யூரி சிபோட்டிரோ இஸ்ரேலிய வானொலிக்கு தெரிவித்தார்.
தீயணைப்புப் படை வீரர்கள் அருகிலுள்ள எரிபொருள் தாங்கிகளுக்கு தீ பரவிவிடாதவாறு தடுப்பதற்கு போராடி வருவதாகவும், இன்னும் சில மணித்தியாலங்களுக்குள் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த தீயின் காரணமாக எத்தனை பேர் காயமடைந்துள்ளார்கள் என்பது தொடர்பில் உடனடியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸ் பேச்சாளர் மிக்கி றொஸன்பீல்ட் தெரிவித்தார்.
இஸ்ரேலிய ஊடக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கணொளியில் தீச் சுவாலையும் கரும்புகையும் தாங்கியிலிருந்து வெளியேறுவது காண்பிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ! வீடியோ
Reviewed by ADMIN
on
10:56 AM
Rating:
Reviewed by ADMIN
on
10:56 AM
Rating:



No comments: