2
1
4
3

அமெரிக்க தேர்தல் - மோசடி செய்த ட்ரம்ப்? வலுக்கும் சந்தேகங்கள்





அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில், ரஷ்யா தலையிட்டதாக மத்தியப் புலனாய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையை விசாரிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை தரப்பினரும், முன்னணி செனட்டர்களும், அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அது குறித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜனநாயகக் கட்சியனரின் ஆவணங்களை ஊடுருவி, திருமதி ஹிலரி கிளிண்ட்டனுக்கு எதிராக அவற்றை வெளியிட்டதாக மோஸ்கோ மீது குறைகூறப்படுகிறது. தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கை அதிகரிப்பதற்கான முயற்சி அது என்றும் கூறப்பட்டது. எனினும் அந்தக் கண்டுபிடிப்புகள் அசட்டுத்தனமானவை எனத் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

ஜனநாயகக் கட்சியினரின் வேலை அது என அவர் சாடினார்.

இருப்பினும், குடியரசு கட்சி, ஜனநாயகக் கட்சி என இருதரப்பு செனட்டர்களும் அந்தக் கண்டுபிடிப்புகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றனர்.

ரஷ்யாவின் தலையீடு, அமெரிக்காவின் ஜனநாயகத்தைப் பாதிக்கக் கூடும் என்றும் அது தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டலாக அமையும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 
அமெரிக்க தேர்தல் - மோசடி செய்த ட்ரம்ப்? வலுக்கும் சந்தேகங்கள் அமெரிக்க தேர்தல் - மோசடி செய்த ட்ரம்ப்? வலுக்கும் சந்தேகங்கள் Reviewed by ADMIN on 9:57 AM Rating: 5

No comments: